ஜனாதிபதி சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்
Thursday, 02 Jul 2020

ஜனாதிபதி சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்

16 May 2019 04:29 am


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.


இன்று அதிகாலை ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இலங்கையில் இணையச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சீனாவின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 260 கோடி ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.