எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும் வாய்ப்பு

எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும் வாய்ப்பு

11 February 2019 08:15 am

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி, திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் இன்று (11 பிப்ரவரி) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம், பெட்ரோல் விலை 2 ரூபாவாலும் , டீசல் விலை 2ரூபாவாலும் மற்றும் சூப்பர் டீசல் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டது.

உலக சந்தையில் எரிபொருள் விலை 62 டாலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இன்றைய தினம், ஆக்டேன் 92 மற்றும் ஆக்டேன் 95 ஆகியவற்றின் விலை முறையே ரூ 123 மற்றும் 147 ரூபாயாகும். கார் டீசல் மற்றும் சூப்பர் டீசல் விலை ரூ. 99 மற்றும் ரூ. 118 ஆகும்.