சர்வதேச வலிப்பு தடுப்பு தினம் இன்று

சர்வதேச வலிப்பு தடுப்பு தினம் இன்று

11 February 2019 07:16 am

இன்று சர்வதேச வலிப்பு தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு நோயைத்தடுப்பதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை வலிப்பு தடுப்பு சங்கமும் சுகாதார அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

சர்வதே வலிப்பு தடுப்பு தினம் குறித்த தேசிய வைபவம் தேசிய வைத்தியசாலையின் வலிப்பு சிகிச்சைப்பிரிவில் இன்று நடைபெறவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜயசிங்கவின் தலைமையில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

வலிப்பு நோயானது எந்த காரணமுமின்றி மீண்டும் மீண்டும் வருகின்ற வலிப்புத்தாக்கங்களைக் கொண்ட ஒரு பொதுவான தீவிரமான நரம்புச் சீர்கேடு ஆகும்.