மூன்று வாரங்களில் பாரிய கூட்டணி வெளிப்படுத்தப்படும் – எதிர்க்கட்சி!
Thursday, 23 Jan 2020

மூன்று வாரங்களில் பாரிய கூட்டணி வெளிப்படுத்தப்படும் – எதிர்க்கட்சி!

10 February 2019 04:25 am

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்று அடுத்த மூன்று வாரங்களில் வெளிப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த கூட்டணி அமையும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் இக் கூட்டணியின் பெயர் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்ட தொழில்நுட்ப குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இக்குழுவானது கூட்டணியின் சின்னம் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்றன தொடர்பான அறிக்கையை மேற்கொண்டு எதிர்வரும் இரு வாரங்களில் செயற்குழுவிற்கு அனுப்பிவைக்ககும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் இந்தக் குழு பேச்சுக்களை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.