மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு
Thursday, 23 Jan 2020

மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு

9 February 2019 08:38 am

மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைக்க போவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரச ஒளடத உற்பத்தி கூட்டுதாபனத்தின் நிர்மாணிக்கப்பட்டு வரும் களஞ்சிய தொகுதியை பார்வையிடுவதற்கு என அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து அதன் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 
 
27 வகையான மருந்து வகைகளின் விலைகளே இவ்வாறு குறைவடைய போவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
மருந்து வகைகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் மிகவும் நியாய விலைக்கு அவற்றை பெற்று கொள்வதால் அரசாங்கத்திற்கு பாரிய இலாபம் கிடைக்கின்றது. 
 
அரச மருந்தாக்கற் கூட்டுதாபனம் எமது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய இலங்கை பூராகவும் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளது. 
 
இதற்கு அமைய பெருமளவு கைத்தொழிற்சாலைகளை நாம் திறந்து வைத்தோம். அரசாங்கம் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மருந்து பொருட்களின் விலைகளை நியாய மட்டத்தில் பேண முடிகின்றது. 
 
பொது மக்களின் நலன்கருதியே இவை அனைத்தும் பேணப்படுகின்றன. முதலில் 48 மருந்து வகைககளின் விலைகளை குறைத்தோம். அதனை மேலும் 25ஆக அதிகரித்தோம். மிக விரைவில் மேலும் 27 வகையான மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம். என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எவ்வித சுமையும் இன்றி இந்த நிறுவனம் மேற்கொள்கின்ற பணிகள் பாராட்டத்தக்கவை எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். 
 
கூட்டுதாபனத்தின் தலைவர் சயுர சமரசிங்க மற்றும் பொது முகாமையாளர் சுஜீவா ஜயசுந்தர உள்ளிட்ட ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.