3டி திரைப்படத்தில் பிரபு
Thursday, 20 Feb 2020

3டி திரைப்படத்தில் பிரபு

8 February 2019 01:56 pm

ஹிந்தியில்   பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோஸா இயக்கி வெளியிட்டார். 
இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தமிழிலும் இதை மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். 
 
இதைத்தொடர்ந்து ரெமோ டிசோஸா ‘ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற புதிய நடன படமொன்றை இயக்குகிறார்.
 
இந்த படத்தில் பிரபல ஹிந்தி  நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். 
 
பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இவர் தமிழில் ‘கப்பல்’ என்ற படத்தில் நடித்தவர். 
 
இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. லண்டனிலும் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள்.
 
இதுவரை இந்தியாவில் வெளியான நடன படங்களை விட அதிக செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். 
 
3-டியில் இது உருவாகிறது. வருண் தவான் கூறும்போது, “பிரபுதேவாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது” என்றார். இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.