சம்பளத்தை உயர்த்தும் பதி
Thursday, 20 Feb 2020

சம்பளத்தை உயர்த்தும் பதி

7 February 2019 11:50 am

தன்னலம் அற்ற மனிதர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களையே மக்களுக்கு கொடுப்பதற்காக நல்ல கதைகளை தெரிவு செய்து நடிக்கிறார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதியிடம் கதை சொல்ல தினமும் 3 இயக்குனர்கள் வருகிறார்களாம்.

தமிழ் திரையுலகில் இதுவரை வராத கதை என்று ஆரம்பிக்கிறார்களாம். விஜய் சேதுபதி புத்திசாலியான நாயகன் என்பதால், உடனே நடிக்க சம்மதிப்பதில்லை. நண்பர்களுடன் கலந்து பேசி, அவர்கள் கருத்தை கேட்ட பிறகே நடிக்க சம்மதிக்கிறாராம்.

தன்னை தேடி வருகிற புதுமுக இயக்குனர்களிடம் இருந்து தப்பிக்க தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறாராம் விஜய்சேதுபதி.