சசிக்கு ஜோடியாக நிக்கி
Thursday, 23 Jan 2020

சசிக்கு ஜோடியாக நிக்கி

6 February 2019 10:27 am

இயக்குனர் மற்றும் நடிகர்சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த `பேட்ட' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக "நாடோடிகள் இரண்டாம் பாகம்" பெப்ரவரியில் வெளியாகவுள்ளது.

சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சபு ஜோசப் படத்தொகுப்பையும், சுரேஷ் கலை பணியையும் மேற்கொள்கின்றனர்.