பாடகர் எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்

பாடகர் எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்

5 February 2019 11:45 am

முன்னணி பின்னணி பாடகர்களின் ஒருவரான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் தாயார் சகுந்தலா தனது 89வது வயதில் காலமானார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த இவர் வயது முதுமை காரணமாக மரணமடைந்ததாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தற்போது லண்டனில் இருக்கும் எஸ்.பி. பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாளை அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது இறுதிச்சடங்கு நாளை நெல்லூரில் நடைபெற உள்ளதாக எஸ்.பி.பி. குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.