அஜித்துக்கு ஜோடியாகும் வித்யாபாலன்
Thursday, 23 Jan 2020

அஜித்துக்கு ஜோடியாகும் வித்யாபாலன்

1 February 2019 12:45 pm

வித்யா பாலன் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

"சில்க் சுமிதா" வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெளியான "த டர்டி பிக்சர்" திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.

இப்போது முதல் தடவையாக "பிங்க்" இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடிக்கிறார்.

இதில் அஜித் மனைவியாக அவர் வருகிறார் என்றும் வழக்கறிஞர் தொழிலில் அஜித்தை ஊக்கப்படுத்துவதுபோல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இருவருக்கும் டூயட் பாடலும் உள்ளது. இந்த படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் வித்தியாபாலன்.