அபிவிருத்தி லொத்தர் சபையின் சுபிரி கோடிபதி வெற்றியாளர்கள்

அபிவிருத்தி லொத்தர் சபையின் சுபிரி கோடிபதி வெற்றியாளர்கள்

22 January 2019 10:50 am

அபிவிருத்தி லொத்தர் சபையினால் கடந்த இரு வார காலத்தினுள் உருவாக்கப்பட்ட இரு கோடிபதிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2019.01.16ம் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அத கோடிபதி சீட்டிலுப்பின் மூலம் வெற்றியீட்டிய 11வது கோடிபதி வெற்றியாளராக 489 ஆம் வார அத கோடிபதியின் பண பரிசிலாக ரூபா. 57,251,915 தொகையை வென்ற அநுராதபுரத்தைச் சேர்ந்த திரு. எம்.ஜீ. யடாலதிஸ்ஸ அவர்களுக்கு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அபிவிருத்தி அதிர்ஷ்டத்தின் 205 ஆம் வார சூப்பர் பரிசு தொகையான ரூபா. 17,273,108 தொகையை வெற்றியீட்டிய வெற்றியாளராக மஹவயைச் சேர்ந்த திருமதி. எஸ்.என்.டப்.எம்.என்.பி. சேமசிங்க அவர்களுக்கும் அத்தினத்தன்று காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

lottery 01

இவ் வெற்றியாளர்களை உருவாக்கிய லொத்தர் சீட்டிலுப்புக்களை விற்பனை செய்த நெலும்குளம் விற்பனை முகவர்களான திரு. எம்.ஆர். உபுல் அவர்களுக்கும் திரு.எம்.எஸ்.கே. திஸாநாயக அவர்களுக்கும் சான்றிதழ்களுடன் பணப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இக் காசோலையினை வழங்கி வைக்கும் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவர் சேன சூரியப்பெரும, செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிறி அவர்களுடன் ஏனைய அலுவலர்களும் கலந்துகொண்டனர்.