11 இளைஞர் கடத்தல் : குற்றப் பத்திரிகை தாக்கல் திட்டமிட்டு இழுத்தடிப்பு
Thursday, 20 Feb 2020

11 இளைஞர் கடத்தல் : குற்றப் பத்திரிகை தாக்கல் திட்டமிட்டு இழுத்தடிப்பு

19 January 2019 09:40 am

2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராக முன்னெடுமுக்கப்பட்டு வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த விசாரணைகள் முடிந்த பின்னர் சந்தேக நபர்கள் மீதான குற்றப் பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எனினும், இந்த இறுதிக் கட்டப் பணிகள் இழுதடிப்புச் செய்யப்பட்டு வருவதுடன் இதன் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இருப்பதாக தெரியவருகிறது.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதே இதற்குக் காணரம் எனக் கூறப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட மீது குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து 2009ஆம் ஆண்டு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டே இளைஞர்கள் கடத்தப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் இருந்தே குறித்த கப்பல் பெறும் குழுவினர் குறித்து வசந்த கரண்ணாகொட அறிந்திருந்ததாகவும், எனினும், அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது. இதனை மையப்படுத்தியும் வசந்த கரண்ணாகொடவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனாலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை அரசியல் பின்னணியுடன் இழுத்தடிக்க அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரியவருகிறது.