11 இளைஞர்கள் கடத்தல் : அடுத்த அடையாள அணிவகுப்பு 23ஆம் திகதி
Thursday, 23 Jan 2020

11 இளைஞர்கள் கடத்தல் : அடுத்த அடையாள அணிவகுப்பு 23ஆம் திகதி

19 January 2019 09:29 am

2008ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் 12வது சந்தேகநபர் அடையாள அணி வகுப்பில் அடையாளம் காணப்பட்டார்.

இந்த நிலையில், சந்தேகநபரை மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அடையாள அணி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போன ஒருவரின் தாய் மற்றும் சகேதரியால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையை சேர்ந்த லெப்டினன் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 3 சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி அடையாள அணி வகுப்புக்கு நடத்தப்படவுள்ளது.