வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க திட்டம்
Monday, 01 Jun 2020

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க திட்டம்

19 January 2019 08:49 am

வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உபாயமார்க்க மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். 
 
கடந்த வருடம்  17 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக எதிர்பார்த்திருந்ததாகவும், அதில் 95 வீத முன்னேற்றம் ஏற்பட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 
 
இதேவேளை நேரடி வெளிநாட்டு முதலீடாக 1.7 பில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
 
அதை இவ்வருடம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 
 
புதிய முதலீட்டு வலயத்திற்கு தேவையான உயர்ந்தபட்ச வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.