வெறும் 30 லட்சம் ரூபாவிற்காக அமைச்சுப் பதவி இழந்த ரவிந்திர!
Monday, 24 Feb 2020

வெறும் 30 லட்சம் ரூபாவிற்காக அமைச்சுப் பதவி இழந்த ரவிந்திர!

25 December 2018 01:55 pm

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் தொழில் விவகார அமைச்சர் ரவிந்திர சமரவீரவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. அதற்கான பின்னணி தற்போது வௌியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் திட்டத்தை செயற்படுத்தி முதலில் ரவிந்திர சமரவீரவிற்கே அழைப்பு எடுத்து தனக்கு ஆதரவு வழங்குமாறு கூறியுள்ளார்.

இந்த அழைப்பை அடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பெடுத்த ரவிந்திர,

ரவிந்திர - 'சேர் என்னை அவர்கள் அழைக்கின்றார்கள், போக வேண்டிய நிலையில் உள்ளேன்'

ரணில் - 'ஏன், எதற்காக?

ரவிந்திர - 'சேர் நான் அதிக கடனில் உள்ளேன். தற்போது திருப்பிச் செலுத்த முடியாமல் வழக்கு தாக்கல் செய்யும் நிலைக்கு வந்துள்ளது'

ரணில் - 'எவ்வளவு'?

ரவந்திர - "30 லட்சம்"

ரணில் - 'கொஞ்சம் இருக்கவும் இப்போது மலிக் பேசுவார்"

அதன்பின் ரவிந்திர சமரவீரவிற்கு அழைப்பெடுத்த மலிக் சமரவிக்ரம, தனது வீட்டிற்கு யாராவது ஒருவரை அனுப்பி வைக்குமாறு கேட்டு அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரிடம் 30 லட்சம் ரூபா பணத்தை கொடுத்தனுப்பிய பின் ரவிந்திரவின் கட்சித் தாவல் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதிய அமைச்சரவைக்கான பெயர் பரிந்துரையின் போது ரவிந்திரவின் பெயர் முன்வைக்கபபட்டபோது உடனே தலையிட்ட ரணில், அவருக்கு அமைச்சுப் பதவி தேவையில்லை, போதியளவு பணம் வழங்கப்பட்டுள்ளதென கூறியுள்ளார்.

அதன்படி அரசியல் குழப்பநிலையின் போது ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியதுபோன்று கட்சி மாறுவதற்கு மாத்திரமல்ல அதே கட்சியில் இருப்பதற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

1977 காலத்தில் ஊவா வெல்லச கிளர்ச்சியின் போது பாரிய பங்காற்றிய பர்சி சமரவீரவின் மகனே ரவிந்திர சமரவீர ஆவார். பணத்தை பெற மலிக்கின் வீட்டிற்குச் சென்றவர் ரவிந்திர சமரவீரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.