பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய எம்பிக்கள் விரைவில் கைது!
Saturday, 22 Feb 2020

பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய எம்பிக்கள் விரைவில் கைது!

17 December 2018 03:13 pm

பாராளுமன்றில் கழகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி குழப்பம் விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக் குழுவிலுள்ள பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா இருவரினால் சி.சி.ரி.வி காணொளிகள் தனித்தனியாக பரிசீலிக்கப்பட உள்ளது.

அத்துடன் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை தனியார் ஊடகங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனியார் ஊடங்களிலிருந்து பெறப்படும் காணொளிகள் பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரியொருவரினாலும் மற்றும் விஷேட பொலிஸ் குழுவினராலும் பரிசீலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.