அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி
Wednesday, 20 Jan 2021

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி

14 August 2018 04:19 am

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நோர்வூட் - பொகவந்தலாவை பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் உயர் பதவியொன்றுக்கு தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது விசேட அம்சமாகும்.

இந்த சம்மேளனத்தின் தலைவராக அத்தனகல்லை பிரதேச சபையின் தலைவர் அத்துகோரள தெரிவுசெய்யப்பட்டதுடன், பிரதித் தலைவர்களாக நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

கைத்தொழில் ஆராய்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் (12) உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூடியபோது, இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்திற்கான உயர் பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் 11 இடங்களையும், இதர இடங்களில் மூன்று இடங்களையும் கைப்பற்றி, மொத்தமாக 14 இடங்களில் ஆட்சியமைத்துள்ளமையினால் இந்த வாய்ப்பு கிட்டியதாக இலங்கைத் தொழிலாளர் தொழிலாளர் காங்கிரசின் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஊடாக எவ்வாறான பணி முன்னெடுக்கப்படுகிறது என்பது குறித்து, அவரிடம் கேட்டபோது,
ஆசிய பசுபிக் வலயத்தில் இந்த சம்மேளனத்தின் தொடர்புகள் வலுவாக இருக்கும் எனவும், இதன்மூலம் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மலையக மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து, இ.தொ.கா.வை வெற்றிபெற வைத்ததே இன்றைய வெற்றிக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுசெல்ல முடியும் எனவும் ரவி குழந்தைவேல் மேலும் குறிப்பிட்டார்.

Ravi5Ravi5Ravi5

Ravi5