தெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்
Thursday, 23 Jan 2020

தெற்கில் பரவும் வைரஸ் குறித்து விசேட கவனம்

21 May 2018 11:26 am

தெற்கில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் குறித்து ஆராய தொற்று நோய் பிரிவின் வைத்தியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுரையின் கீழ் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திஸாநாயக்க தலைமையில் வைத்தியர்கள் குழுவொன்று தெற்கு பகுதிக்குச் சென்று வைரஸ் குறித்து ஆராய்ந்துள்ளது. இன்று 21ம் திகதியும் அங்கு மற்றுமொரு வைத்தியர்கள் குழு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குறித்து இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றதுடன் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை உடனடியாக வழங்கு தீர்மானிக்கப்பட்டது.

தெற்கு பகுதியில் குறித்த வைரஸ் பரவி வருவதாகவும் இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புக்களும் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.