மக்கள் வங்கியின் 60 வருட சாதனைகள் அடங்கிய சஞ்சிகை பிரதமரிடம் கையளிப்பு
Saturday, 27 Nov 2021

மக்கள் வங்கியின் 60 வருட சாதனைகள் அடங்கிய சஞ்சிகை பிரதமரிடம் கையளிப்பு

18 August 2021 02:04 pm

மக்கள் வங்கியின் 60 வருட கால அபிமானங்கள் உள்ளடங்கிய சஞ்சிகை ஒன்றை அதன் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ கடந்த 16ம் திகதி அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 

60 வருட காலமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள் வங்கியின் பங்கு மற்றும் மக்கள் வங்கியின் முன்னேற்றத்தில் பங்கு வகித்த தலைவர்கள், பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்கள் குறித்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

60 வருட வரலாற்றில் 14 மில்லியன் மக்களுக்கு சேவையை வழங்கியுள்ள மக்கள் வங்கி 18 மில்லியன் கணக்குகளை கொண்டுள்ளது. 

இலங்கையின் டிஜிட்டல் வங்கித் துறைக்கு அடித்தாளமிட்ட மக்கள் வங்கி 2.3 ட்ரில்லியன் பெறுமதிக்கு உரிமைக் கொண்டுள்ளது. 

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 748 வங்கிக் கிளைகளில் சுமார் 8000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 60 வருடங்கள் மக்களுக்கு சேவை செய்துள்ள மக்கள் வங்கியின் சாதனை மற்றும் செயற்பாடுகள் அடங்கிய தகவல்கள் இந்த சஞ்சிகையில் இருப்பதாக மக்கள் வங்கியில் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.