இரசாயன உர இறக்குமதி தடையால் தேயிலை, செம்பனை செய்கைகளுக்கு ஆபத்து
Saturday, 25 Sep 2021

இரசாயன உர இறக்குமதி தடையால் தேயிலை, செம்பனை செய்கைகளுக்கு ஆபத்து

25 July 2021 09:37 pm

இலங்கையில் இரசாயன உர இறக்குமதி தடை காரணமாக தேயிலை மற்றும் செம்பனை செய்கைகள் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொட்டக்கல மற்றும் சைன்சைன் நிறுவனங்களுக்கு கடன் எதிர்மறை நிலை ஏற்படக்கூடும் என பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் கூறியுள்ளது. 

வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வௌியில் செல்வதை தடுக்கும் நோக்கில் மே மாதம் 6ம் திகதி தொடக்கம் இரசாயன உர இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. 

இரசாயன உர இறக்குமதி தடை தொடர்ந்தால் இலங்கையின் தேசிய தேயிலை உற்பத்தி 40 - 50 வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதென தேயிலை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் உள்நாட்டு சந்தையில் தேயிலையின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதெனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.