அழகான நீர்வீழ்ச்சியுடன் மாலபேயில் சொகுசு வீட்டுமனை
Sunday, 09 May 2021

அழகான நீர்வீழ்ச்சியுடன் மாலபேயில் சொகுசு வீட்டுமனை

25 June 2020 10:49 pm

கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று இலங்கையின் காணி கட்டட வர்த்தகத் துறையில் முதன் முறையாக ICRA Lanka (A-) கடன் மதிப்பீட்டை தனதாக்கிக் கொண்ட பிரைம் குழுமம் தமது புதிய வேலைத் திட்டமான Prime Waterfall Residencies வீட்டுமனைத் திட்டத்தை ஜூன் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 

கொழும்பு நகரை அண்மித்த அனைத்து நகர வசதிகளையும் உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப வலயத்திற்குள் (IT Zone) அமைந்துள்ள மாலபே சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் அமைதியான சூழலில் இந்த வீட்டுமனைத் திட்டத்தின் கீழ் 40 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த ஒட்டுமொத்த வேலைத்திட்டமானது பாரிய சுற்றுச் சூழல் கொள்கைகளுக்கு ஏற்ப ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் கொண்டு கட்டப்படவுள்ளது. பெரியவர்களுக்கும் மற்றும் சிறார்களுக்கும் வேறு வேறான விதத்தில் இரண்டு நீச்சல் குளங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட சூழலும், மனநிறைவான வாழ்க்கைக்கு தேவையான யோகா பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட சூழல் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்த வீட்டுமனை திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வரும் உயரமான நிலப்பரப்பின் இருப்பிடத்தைப் பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புக்களின் மேல் தளங்களுக்கு சென்றால் மாலை வேளையில் சூரியன் மறையும் பொழுதில் கொழும்பு நகரின் பல்வேறு காட்சிகளையும் காண முடியும். அத்துடன் வெளிபுற உடற்பயிற்சி மையம், நடைபயிற்சிக்கான பாதை மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத் தோட்டம் ஆகியவை இந்த திட்டத்திற்கு புதிய வாழ்க்கை அனுபவத்தை சேர்க்கின்றன.

 இது பிரைம் குழுமத்தால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மற்றுமொரு தனித்துவமான வீட்டுத் திட்டமாகும், இதன் அர்த்தம் இதில் குடியிருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒரே நேரத்தில் நீர்வீழ்ச்சியை கண்டு கழிக்க முடியும். Prime Waterfall Residencies வீட்டுமனைத் திட்டத்தின் வளாகத்தில் 100 அடி நீர்வீழ்ச்சியையும் நீர்வீழ்ச்சி தளத்தில் ஒரு அழகான குளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நீர்வீழ்ச்சியானது கருங்கற்களால் ஆனதுடன் இயற்கை அழகைக் கொண்டவை. வீட்டுமனைத் திட்டம் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 மணிநேரமும் பாதுகாப்பு கெமராக்கல் மூலம் கண்காணிக்கப்படும். இந்த வீட்டுமனைத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் பொதுவான சூழலில் சூரிய சக்தியினால் எரியக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் கழிவுப் பொருட்களை பசளையாக மாற்றக்கூடிய விதத்தில் அங்குள்ள சூழல் வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரை அண்மித்துள்ள மாலபே Prime Waterfall Residencies வீட்டுமனைத் திட்டம் அமைந்த சூழலானது நெவில் பெர்ணான்து வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ளதுடன் ஹொரைசன் சர்வதேச பாடசாலை, நீச்சல் குளம் மற்றும் பகல்நேர பாதுகாப்பு மையம் ஆகியனவும் அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெளிபுற சுற்றுவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையின் கொத்தலாவல மற்றும் வெலிவிட்ட நுழைவாயில்களுக்கு மிக அருகில் உள்ளதனால் இலங்கையின் நெடுஞ்சாலை வலையமைப்பிற்குள் இலகுவாக தொடர்புகொள்ள முடிவதுடன் இந்த வீட்டுத் திட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ளுடுஐஐவு கல்வி நிலையம் அருகில் அமைந்துள்ளதோடு 143 மற்றும் 177 வழி பஸ் போக்குவரத்து வசதிகளும் உள்ளதுடன் அனைத்து முக்கிய பல்பொருள் அங்காடிகளும் 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளன. இந்த வீட்டுமனைத் திட்டத்தின் இயற்கை சூழலில் பல்வேறு பறவைகள் காணப்படுகின்றமை மற்றுமொரு அழகிய காட்சியாக அமையும்.

“Prime Waterfall Residencies” வீட்டுமனைத் திட்டம் அமைக்கப்படவுள்ள சூழல் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பாகும் என்பதுடன் இங்கு அமைக்கப்படும் வீடுகள், இரு அடுக்குமாடியாகவும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. 

1552 முதல் 1707 சதுர அடி வரையிலான மூன்று பிரமிக்க வைக்கும், விசாலமான வடிவமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வாடிக்கையாளர் அவரது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம். 10 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் விசாலமான சுற்றுப்புற வசதிகளைக் கொண்டுள்ளமை தனித்துவமான அம்சமாக உள்ளது. 

நவீன சமையலறை வசதி, வெண்நீர் வழங்கல் வசதி மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய நவீன வசதிகளுடன், சுத்தமான காற்றை வழங்கக் கூடிய அதிநவீன உபகரணங்களைக் கொண்டு “Prime Waterfall Residencies” அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரைம் குழுமம் இந்த நவீன வீட்டுத் திட்டத்தை 2022ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் கையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதுடன், ஒரு வீட்டின் பெறுமதி 24.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதுடன் 2 வருடத்திற்கு வட்டியில்லா கட்டண கால வசதிகளையும் பெற்றுக் கொடுக்கின்றது.

“Prime Waterfall Residencies” வீட்டுமனைத் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரைம் குழுமத்தின் பொதுமுகாமையாளர் ருமிந்த ரந்தெனிய, 'இந்த திட்டம் சந்தேகத்திற்கிடமின்றி நகரின் சன நெரிசலான சூழலுக்கு வெளியே உள்ள அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பமும் கொண்ட இரண்டு மாடி வீட்டில் வாழ விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாகும். இது 24 மணிநேர பாதுகாப்பு, விளையாட்டு வசதிகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கண்கவர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வசதியான வாழ்க்கைக்கு பல வசதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. 

இந்த முழுத் திட்டத்திலும் சுற்றுச்சூழல் அழகு மற்றும் உடல் நலனை உருவாக்க நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் வீட்டு கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு அடையாளமாக இருக்குமென நான் நம்புகிறேன்.' என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொழில்புரியும் சிறந்த நிறுவனங்கள் 25ற்குள் தொடர்ச்சியாக 5 தடவை தெரிவான பிரைம் குழுமம் முழுமையான இலங்கை வியாபாரமாகும் என்பதுடன் LMD சஞ்சிகையினால் 2016 முதல் 2019 வருடத்தில் இந்த நாட்டு வர்த்தகத் துறையில் கௌரவமான வர்த்தக இலச்சினைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவன குழுமம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.