எயார்டெல் Anytime Bonus Data Rewardஐ அறிமுகம் செய்கிறது
Monday, 06 Apr 2020

எயார்டெல் Anytime Bonus Data Rewardஐ அறிமுகம் செய்கிறது

17 February 2020 12:48 pm

  • பகல் அல்லது இரவு என மறைமுகமாக பிரிக்கப்படாத பயன்பாட்டிற்கு
  • தற்போது சந்தையில் அதிகமான கொடுப்பனவும் நெகிழ்வான தீர்வுகளும் வழங்குதல்
 
எயார்டெல், இலங்கையில் அதிகமான இளம் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு வணிக செயற்பாடுகளில் ஈடுபடும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராகும். தமது வாடிக்கையாளர்களினால் தினம் தினம் அதிகரித்துவரும் வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டு புதிய Bonus Data  கொடுப்பனவு ஆலோசனை முறைமையை பெற்றுக் கொடுத்துள்ளதாக எயார்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் தினம் தினம் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் போது Dataவுக்கான கேள்வியும் அதிகரிப்பது சாதாரண விடயமாகும்.
 
இலங்கையில் முதல் முறையாக பல்வேறு னுயவய பெக்கேஜ் தொடர்பாக 50% சதவீதம் வரை Dataவைப் பெற்றுக் கொள்ள எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதுடன் அதற்காக மேலதிக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. மறைக்கப்பட்ட கட்டணம் இல்லாமல் ‘App Bonus Data’  திட்டத்தை அனைத்து எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. டேட்டா ரீசார்ஜ், ரீலோட் செய்தல், கிறடிட் அல்லது டெபிட் அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் இணைய கொள்வனவு மற்றும் in-app கொள்வனவு செய்வதற்காக மிகவும் இலகுவாக இந்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
எயார்டெல் பாவனையாளர்களுக்கு அவர்களது MyAirtel Appஐ பயன்படுத்தி bonus data கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் MyAirtel Appஐ இயக்காத பாவனையாளர்களுக்கு மொபைல் டேட்டா பெற்றுக்கொள்ளும் போது தன்னியக்க குறுந்தகவல் ஊடாக  App linkஐ பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் தினேஷ் ஹெக்டே, 'டேட்டா பாவனையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றதுடன் பாவனையாளர்களின் அனுபவங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க எயார்டெல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பகல் அல்லது இரவு என்ற வேறுபாடின்றி இணையத்தளங்களைப் பார்வையிடும் பாவனையாளர்களுக்கு அவர்களது இணையத் தொடர்புகளின் வேகத்தை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். இணைய தொடர்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியமைக்கு இதுவே காரணமாகும். பகல் வேளை இரவு வேளை எல்லைகளை தகர்த்தெறிந்து தமது இணையத்தள தொடர்புகளை மறைக்கப்பட்ட கட்டணம் நிபந்தனைகள் அல்லது தடைகள் இன்றி பயன்படுத்துவதற்கு நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பாவனையாளர்களுக்கு உச்ச பயன்பாட்டை பெற்றுக் கொடுத்து அவர்களது தொலைத் தொடர்பு தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.' என தெரிவித்தார்.
 
பாவனையாளர்களுக்கு உச்ச அளவிலான நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எயார்டெல் நிறுவனம் தமது பாவனையாளர்களுக்கு கட்டணம் இன்றி 4G Sim  அட்டைக்கு தம்மிடம் ஏற்கனவே இருக்கும் Sim அட்டையை மாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் அதற்காக 5GB டேட்டா இலவசமாக கிடைக்கின்றமை விசேட அம்சமாகும். 780 அல்லது *780#  என Type செய்து அல்லது Sim அட்டை மாற்றும் அருகிலுள்ள விற்பனை முகவர் நிலையத்திற்குச் சென்று இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வததற்கு எயார்டெல் பாவனையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
 
#AirtelThanks  என்ற எயார்டெல் நிறுவனத்தின் விசேட கொடுப்பனவு வேலைத்திட்டமானது தமது இணையத்தள பயன்பாட்டுக்கு அமைய அநேகமான சேவைகளுக்கு மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும். இந்த கொடுப்பனவுகள், கொடுக்கல் வாங்கல், அல்லது கழிவுகள் ஆயவற்றை ‘MyAirtel’ App'  ஊடாக பெற்றுக் கொள்வதற்கு எயார்டெல் பாவனையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. ‘MyAirtel’ இலவச பாவனையாளர் சேவையைப் பெற்றுக் கொடுக்கும் ; Appஆக அமைவதுடன் இலங்கையிலுள்ள அனைத்து எயார்டெல் பாவனையாளருக்கும் அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ‘MyAirtel’ Appஐ பயன்படுத்துவதன் மூலம் பாவனையாளர்களுக்கு அவர்களது கணக்கிற்கு செல்ல முடிவதுடன் டேட்டா பயன்பாட்டை பரிசீலித்தல், ரிசார்ஜ் செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் பாடல்கள் அல்லது படங்களை பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
 
Bharti Airtel Lanka வை பற்றி
 
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.