வேறு யாருக்கும் கொரோனா இல்லை, அதனால் போட்டி இன்று
Saturday, 25 Sep 2021

வேறு யாருக்கும் கொரோனா இல்லை, அதனால் போட்டி இன்று

28 July 2021 09:56 am

இலங்கை  - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டி நேற்று இடம்பெற இருந்த நிலையில், இந்திய வீரர் குருநால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டது. 

ஏனைய வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.