திடீரென நிறுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் ஆட்ட மோசடி விசாரணை
Thursday, 13 Aug 2020

திடீரென நிறுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் ஆட்ட மோசடி விசாரணை

3 July 2020 05:51 pm

2011 ம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பாக  ஆரம்பிக்கப்பட்ட விசாரணை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இனி நடத்தப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக விளையாட்டு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் குறித்த போட்டியில் ஆட்ட மோசடி இடம்பெற்றமைக்கான போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை என்பதாலும் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

KK