மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு தினேஷ் குணவர்தனவின் உரை
Saturday, 25 Sep 2021

மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு தினேஷ் குணவர்தனவின் உரை

27 February 2020 11:51 pm

மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வின் உயர் மட்ட அமர்வுவின் இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்  தினேஷ் குணவர்தனவின் அறிக்கையை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
குறித்த அறிக்கை பின்வருமாறு.
 
கௌரவ தலைவர் அவர்களே!
கௌரவ உயர்ஸ்தானிகர் அவர்களே!
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களே மற்றும் பிரதிநிதிகளே!
கனவான்களே மற்றும் சீமாட்டிகளே!
 
இந்த சபை அறிந்திருக்கும் வகையில், 2019 நவம்பர் மாதத்தில், 'திறன்மிக்க குடிமக்கள், திருப்திகரமான குடும்பம், ஒழுக்கமானதும் நியாயமானதுமான சமூகம் மற்றும் வளமான நாடொன்றின் நான்மடங்கு விளைவை' அடைவதை நோக்காகக் கொண்ட கொள்கைக் கட்டமைப்பை அடைந்து கொள்வதற்கானதொரு மகத்தான ஆணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை மக்கள் வழங்கினர் . 'எமது மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக எல்லையை சமரசம் செய்யாமல் தேசியப் பாதுகாப்பை' பாதுகாப்பதில் உறுதியாக நங்கூரமிட்டுள்ள வகையில் நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக இது திட்டமிடப்பட்டுள்ளது .
 
1. இலங்கையினால் முன்னர் முகங்கொடுக்கப்பட்ட இருத்தலியல் அச்சுறுத்தல்
 
மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாத மோதல் முழுவதும், மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற எல்.ரீ.ரீ.ஈ. யின் பயங்கரவாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எல்.ரீ.ரீ.ஈ. ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமன்றி, நாடு முழுவதிலும் அடிப்படைச் சுதந்திரங்களை மறுத்தது. எல்.ரீ.ரீ.ஈ. யினால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களில் இன அழிப்புப் பிரச்சாரங்கள், அனைத்து இனங்களினதும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை படுகொலை செய்தல், இளம் சிறார்களை போராளிகளாக நியமித்தல், பொதுமக்கள் வதியும் பகுதிகளில் கண்மூடித்தனமாக கண்ணிவெடிகளைப் புதைத்தல் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பைத் தாக்குதல் ஆகியவை உள்ளடங்கும். இந்த அவை நன்கு அறிந்திருக்கும் வகையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்களின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஐந்து முயற்சிகள் ஒருதலைப்பட்சமாக எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் ரத்துச் செய்யப்பட்டு, இந்த இடைவெளிகள், போரிலிருந்து ஆயுதம் மற்றும் குழுக்களை மீளக் கட்டமைத்து, மீண்டும் போருக்குத் திரும்புவதற்காக அவர்களால் பயன்படுத்தப்பட்டன. 
 
ஜூலை 2006 இல், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய மதகு மூடப்பட்டமையானது, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுத்ததோடு, இலங்கை மக்களை எல்.ரீ.ரீ.ஈ. யின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையைத் தொடங்கி, அதன் முடிவில்லாத பயங்கரவாதப் பிரச்சாரத்திலிருந்து அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் அப்போதைய அரசாங்கத்திற்கு இருக்கவில்லை. சமாதான முன்னெடுப்புகளின் இணைத் தலைவர்கள் மற்றும் ஐ.நா. முகவர் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பங்குதாரர்கள் கலந்து கொண்ட மனிதாபிமான உதவிக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டங்களின் பதிவுகள், மனிதாபிமான நடவடிக்கையின் போது மோதல் வலயத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொன்றையும் தெளிவாகக் காட்டுகின்றது.
 
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 18 மே 2009 அன்று, எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை இலங்கை, இராணுவ ரீதியாக தோற்கடித்து, மூன்று தசாப்த கால மோதல்களையும் துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மிருகத்தனமான மோதலின் நிறைவானது, அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய அனைத்து இலங்கையர்களினதும் 'உயிர் வாழ்வதற்கான உரிமையை' மேம்படுத்தி, பாதுகாத்தது. இலங்கையில் பிரிவினைவாத பயங்கரவாதத்தின் பெயரில் 2009 மே மாதம் முதல் ஒரு துப்பாக்கி வேட்டேனும் சுடப்படவில்லை என்பதை நான் பெருமையுடன் கூற விரும்புகின்றேன். இன்றுவரை, எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு 32 நாடுகளால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது அவர்கள் பின்பற்றிய வெறுக்கத்தக்க பயங்கரவாதப் பாதைக்கு எதிரான உலகின் அங்கீகாரத்தை குறித்து நிற்கின்றது.
 
2. இலங்கை அரசாங்கத்தின் மோதலுக்கு பிந்தைய நடவடிக்கை
 
எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் நிறைவானது ஒரே இரவில் நீடித்த அமைதியை தோற்றுவிக்கும் என்ற மாயை இலங்கைக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த சபை கையாளும் பல மோதல் சூழ்நிலைகளைப் போலவே, இலங்கையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதொரு விடயப்பொருள் அல்ல என்றாலும், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சில மதிப்புரைகள் மற்றும் இருக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தேவை இலங்கைக்கு உள்ளது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டிருந்தோம்.
 
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம், மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் பாதுகாப்பைக் கடக்கத் தொடங்கிய நூறாயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டவுடன், மனிதக் கேடயங்களாக வைத்திருந்த எல்.ரீ.ரீ.ஈ. யின் பிடியிலிருந்து தப்பிய 300,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் உடனடி மனிதாபிமான உதவிகளையும் வழங்கினர். இதைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் காணப்பட்ட உண்மைகளை அறிந்து, இலங்கையில் 'குணப்படுத்துதல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலைக்' கொண்டுவருவதற்காக நிலையானதொரு நல்லிணக்கச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் சிறந்த வளமுள்ள நாடுகள் நிவர்த்தி செய்து, சாதிப்பதற்கு பல தசாப்தங்களை எடுத்துள்ளமையினால், இது மேம்பட்ட மற்றும் உள்ளடக்கமிகு செயன்முறையொன்றாகக் கருதப்பட்டது.
 
அந்த நேரத்தில் நான் உறுப்பினராக இருந்த இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், புனரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கி செயற்படுவதற்கான செயன்முறையொன்றை மேற்கொண்டது. இந்த செயன்முறையானது, மோதலுக்கு பின்னர் பொதுமக்கள் வாழ்க்கையை மறுசீரமைப்பதிலும், நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதிலும் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
 
i) மூன்று தசாப்த கால பழைய மோதலின் முடிவில், வடக்கு மற்றும் கிழக்கில், பொதுமக்கள் அதிகளவில் வதியும் பாரியதொரு நிலப்பரப்பில் (1311 சதுர கி.மீ) எல்.ரீ.ரீ.ஈ.யினால் மிக அதிக அளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடித்திராத வெடிக்கும் பொருட்கள் எதுவித பதிவுகளும் இன்றி வைக்கப்பட்டிருந்தன. மோதலுக்குப் பின்னர் வீடுகளுக்குத் திரும்பும் குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு இது ஒரு பெரும் தடையாக இருந்தது. கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு வரைபடங்களோ, குறிக்கப்பட்ட அமைவிடங்களோ இல்லாத காரணத்தினால், இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலுக்குட்படுத்தப்பட்டது. இந்த சவாலை எதிர்கொள்வதற்காக பாதுகாப்புப் படைகள் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெகளை அகற்றுவதற்கான விரிவானதொரு நடவடிக்கையை நடத்தியதுடன், இதற்காக பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவும் கிடைத்தது. 2014 டிசம்பர் நிலவரப்படி, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்திருந்த நிலையில், 94% கண்ணிவெடியகற்றுதல் செயற்பாடு ஏற்கனவே நிறைவடைந்திருந்தது, தற்போது அது 98.7% ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர், கண்ணிவெடி வெடித்ததில் பொதுமக்கள் காயமடைந்த ஒரு சம்பவமும் கூட பதிவாகவில்லை.
 
ii) 440,000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதிலும் , மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடகட்டமைப்பு மேம்பாட்டிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. ஆகஸ்ட் 2012 இல் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா. அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பிரதிபலிப்புப் பிரிவின் பணிப்பாளர் இதனைப் பாராட்டினார் . டிசம்பர் 2014 நிலவரப்படி, நிறைவடைந்திருந்த 89.71% மீள்குடியேற்றம், தற்போது 93.76% ஆக உயர்வடைந்துள்ளது.
 
iii) மோதலின் போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய நிலங்களை விரைவாக விடுவிப்பதற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்தது. டிசம்பர் 2014 நிலவரப்படி, 71.01% தனியார் நிலம் முழுவதுமாக அவற்றின் உரிமையாளர்களிடம் மீள வழங்கப்பட்டதுடன், தற்போது அது 92.22% ஆக உயர்வடைந்துள்ளது.
 
iv) மோதலின் போது நியமிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்கள் மோதல் முடிந்தவுடன் விரைவாக முடிவுறுத்தப்பட்டன. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் பாதுகாப்புப் படைகளின் இருப்பு 2014 ஆம் ஆண்டின் இறுதியில் கணிசமாகக் குறைவடைந்தது.
 
v) சபையின் இந்த உயர்மட்ட அமர்வானது, 'சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தை அமுல்படுத்துதல்' என்ற கருப்பொருளைக் கருத்தில் கொண்டு அமைந்துள்ளதால், மோதல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எல்.ரீ.ரீ.ஈ. யினால் வலுக்கட்டாயமாக சிறுவர் படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் வெற்றிகரமாக மறுவாழ்வு அளிக்கப்பட்டு 2012 க்குள் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டனர் என்பதனை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம் என நான் நம்புகின்றேன்.
 
vi) மோதலின் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டனர். உண்மையில், இவர்கள் இறையாண்மை மற்றும் ஜனநாயக அரசுக்கு எதிராக பிரிவினைவாதப் போரை நடத்தியிருந்தாலும், பல தசாப்த கால மோதல்களுக்குப் பின்னரான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என கருதப்பட்டதனால், இந்தப் போராளிகளில் பெரும்பான்மையினருக்கு எதிராக அரசாங்கம் பழிவாங்கும் நீதியைத் தொடரவில்லை. 
 
vii) வடக்கு மற்றும் கிழக்கு விடுதலையானவுடன், சமூகத்திற்கு அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவதனை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், புகையிரதம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம், மீன்வளம், மின்சார விநியோகம், கல்வி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு, விரைவானதொரு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பொதுத்துறை சார்ந்த முதலீடுகளின் விளைவாக, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டதுடன், இது 2012 இல், மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகமானதாக இருந்தது.
 
viii) 1987 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், 1989 முதல், வட மாகாண சபைக்கு வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமை எல்.ரீ.ரீ.ஈ. யினால் வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு மறுக்கப்பட்டது. இயல்புநிலையை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்கதொரு நகர்வாக, 2013 ஆம் ஆண்டில், வட மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முடிந்தமையை குறிப்பிடலாம் என்பதுடன், இதனால் ஜனநாயகம் வலுப்பெற்றது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களும் மே 2008 இல் கிழக்கு மாகாணத்தின் விடுதலையின் பின்னர் நடைபெற்றது.
 
ix) இதற்கு இணையாக, மோதலுக்குப் பின்னர் இலங்கை மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளுக்கு இணங்க, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட மோதலுக்குப் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, பல்வேறு உள்நாட்டுப் பொறிமுறைகள்/ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு  மற்றும் பரணகம ஆணைக்குழு  ஆகியவை உள்நாட்டில் விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை குறித்த புதுப்பித்த தகவல்களை வழங்கி வருகின்றன.
 
இலங்கை மக்கள் அனைவரையும் கருதிய வகையிலான இந்த அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அளவீடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும், சீரான நல்லிணக்க செயன்முறை மூலம் ஸ்திரத்தன்மை, மனிதாபிமான நிவாரணம் மற்றும் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை அங்கீகரிக்கத் தவறிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களின் குழுவொன்று, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீதான தொடர்ச்சியான நாடு சார்ந்த தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமுல்படுத்தியது.
 
3.தீர்மானம் 30/1
 
2015 ஜனவரியில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கமானது, நல்ல பலன்களையளித்த இந்த
உள்நாட்டு நல்லிணக்க செயன்முறையின் பாரத்தைக் குறைத்தது. மனித உரிமைகள்
பேரவையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறும் நாட்டின் குறிப்பிட்ட தீர்மானங்கள்
குறித்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு மாறாகவும், இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் கழகத்தின் தீர்மானம் 30/1 இற்கு இணை அனுசரணையை வழங்கியது.
 
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மேற்கூறிய மிக முக்கியமான அம்சங்களுக்கோ அல்லது செயற்பாடுகளுக்கோ 2015 ஆம் ஆண்டின் இலங்கை மீதான புலன்விசாரணை (OISL) அறிக்கையோ அல்லது 30/1 தீர்மானமோ காரணியாக இருக்கவில்லை.
 
2015 இற்கு முன்னர் தொடங்கப்பட்டு தொடரப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வதற்கான கட்டமைப்பு இலங்கைக்குப் பாதகமென்பதால் புறக்கணிக்கப்பட்டது.
பிரத்தியேகமாக, முன்னைய அரசாங்கமானது; 30/1 தீர்மானத்திற்கு மட்டுமன்றி, அண்மைக்காலங்களில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த ஒரே தேசிய பாதுகாப்பு அமைப்பான இலங்கை பாதுகாப்பு படையினரின் வீரத்தை நியாயமில்லாமல் அவதூறுக்குள்ளாக்குவதற்கும் அடிப்படையான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் இலங்கை பற்றியதிலான மிகவும் குறைபாடுள்ள புலன்விசாரணை அறிக்கையை ‘பாராட்டுதலுடன் குறிப்பிட்டது’. மூலத்தையோ நம்பகத்தன்மையையோ சரிபார்க்கமுடியாத, தகவல் மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்ட இலங்கை மீதான புலன்விசாரணை அறிக்கை (OISL) ஒரு "மனித
உரிமை விசாரணை மட்டுமே தவிர, குற்றவியல் விசாரணை அல்ல"  என்று ஒப்புக் கொண்ட போதிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டது. 
 
மேலும், இதற்கு மாறாக, கற்றறிந்த பாடங்கள் மற்றும்நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடுகளுக்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான ‘பரணகம ஆணைக்குழு’ போன்ற உள்நாட்டு அறிக்கைகளில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கைகள், முன்னாள்
 
https://847da763-17e4-489f-b78a-b09954fec199.filesusr.com/ugd/bd81c0_02a8e91c18ab47359763b405c2d9f89e.pdf
7 இலங்கை மீதான OHCHR விசாரணையின் அறிக்கை (OISL), A / HRC / 30 / CRP.2, 16 செப்டம்பர் 2015,
பந்தி. 5 (பக்கம் 5)"ஆரம்பத்தில் OISL ஒரு மனித உரிமை விசாரணையை நடத்தியது, ஒரு
குற்றவியல் விசாரணையை அல்ல என்பதை வலியுறுத்துவது முக்கியம்" மற்றும் பந்தி. 33
(பக்கம் 10)
 
(முழுமையான அறிக்கை)
 
7
இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட தூதர்களின் கருத்துக்களை மையமாகக் கொண்ட பொதுமக்கள் இறப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட தவறான கருத்துக்கள், நேஸ்பி பிரபுவால் ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களால் மறுதலிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகளும் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட பிற இராஜதந்திர தந்திகளும், பொய்களை நிரூபிக்கின்றன.
 
அரசியலமைப்பு ரீதியாக இத்தீர்மானமானது, இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நிறைவேற்ற முடியாத கடமைகளைச் சுமத்த முற்படுவதுடன், இலங்கை மக்களின் இறையாண்மையையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும் மீறுகிறது. இணை அனுசரணை தொடர்பில் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய இலங்கையைத் தூண்டிய இன்னொரு காரணி இதுவாகும்.
 
நடைமுறையின்படி, முன்னைய அரசாங்கமானது, 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்து ஜனநாயகக் கொள்கைகளையும் மீறியது. வரைவு உரை வழங்கப்படுவதற்கு முன்பே தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்த பின்னர், ஒரு சர்வதேச அமைப்பின் ஆணைகளை நிறைவேற்றுவதற்காக, அரசாங்கம் நாட்டைப் பிணைப்பதற்கான எந்தவொரு அமைச்சரவை ஒப்புதலையும் கோரவில்லை. அத்தகைய இணை அனுசரணை பற்றிய செயன்முறை, நடவடிக்கைகள் மற்றும் விளைவுகள் குறித்து பாராளுமன்றத்திற்கு எந்தக் குறிப்புமில்லை. மேலும் முக்கியமாக இத்தீர்மானமானது, அதன் உள்ளார்ந்த சட்டத்திற்குப் புறம்பான, வழங்கமுடியாத ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதால், நாட்டில் அதி உச்ச சட்டமான இலங்கையின் அரசியலமைப்பினை மீறுவதாகிறது. இது; தொழில்முறை இராஜதந்திரிகள்,
கல்வியாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களையும்
மீறியது. 
 
முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தம்மிடம் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடவில்லையென்று தெரிவித்திருந்தார். இன்று வரையில் இது இலங்கையின் இறையாண்மைக்கும் கௌரவத்திற்கும் ஒரு களங்கமாக இருக்கிறது. ஒரு சில நாடுகளை மகிழ்விப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதற்கான வலுவான எதிர்ப்பும் ஆதாரங்களும் இருந்தபோதிலும், இப்பரிசோதனையை மேற்கொள்வதற்காக இந்த நாட்டைக் கட்டுப்படுத்திய கடமைகள் நடைமுறைக்கு மாறானவை, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை மற்றும் நம்பமுடியாதவை.
பாதிக்கப்பட்ட எமது கௌரவத்தைப் பொறுத்தவரையில், இது சர்வதேச அமைப்பின் மீதான இலங்கையர்களின் நம்பிக்கையையும், சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கையின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் படிப்படியாக அழித்துவிட்டது. பொறுப்பற்ற இந்த நடவடிக்கையானது நீண்டகாலமாக வளர்க்கப்பட்ட பிராந்திய உறவுகள் மற்றும் அணிசேரா மற்றும் தெற்காசிய ஒற்றுமையையும் சேதப்படுத்தியது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது ஒரு "ஆதாயம் அல்லது இழப்பு என்ற விளையாட்டாக"  குறைக்கப்பட்டு, எனது நாட்டை உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு "பகடைக்காய்" ஆக்கியதுடன், தேவையில்லாமல் இலங்கையை அதன் பாரம்பரியமான நடுநிலைமையிலிருந்து அப்புறப்படுத்தியது. மிக முக்கியமாக, 30/1 இற்கிணங்க நாட்டில் கட்டளையிடப்பட்ட மாற்றங்கள், தேசிய நலனைக் குறைத்து மதிப்பிட்டதுடன், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்காகக் கொண்ட
 
(முழுமையான அறிக்கை)
 
8
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தேசிய உளவுத்துறை நடவடிக்கைகள் பலவீனமடைந்து, அது தொடர்பான பாதுகாப்புகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட குறைபாடுகளுக்குப் பங்களித்ததாகக் கருதப்படுகின்றன. இதன் விளைவாக வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட உயிர் இழப்புகள் ஏற்பட்டதுடன், தேசிய பாதுகாப்பைமீட்டெடுப்பதில் அரசாங்கம் சவால்களை எதிர்கொள்கிறது.
 
2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய முந்தைய அரசாங்கமானது, எனக்கு முந்தைய அமைச்சர் இந்த கழகத்தில் அளித்த அறிக்கையின் மூலம் அதன் கட்டளைகளை அகற்றும் செயன்முறையைத் தொடங்கியது முரண்பாடாகவுள்ளது. இதே அறிக்கை, 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை செய்யும்போதிருந்த உண்மையான தடைகளை ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இத்தீர்மானத்தின் இணை அனுசரணையின் சார்விதிகளைத் தகுதியானதாக்க முயன்றது. இது 30/1 தீர்மானம் பிரச்சனையின் தன்மையின் பண்புருக்களையும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின்
எண்ணிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியது, பாதுகாப்புப் படையினரின் குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளியது, கோரப்பட்ட பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தின் விளைவைக் குறைத்தது, மற்றும் முன்வைக்கப்பட்ட நீதித்துறை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் ஈடுபாட்டை இலங்கை அரசியலமைப்பு தடுக்கிறது என வலியுறுத்தியது. இதை ஒப்புக்கொண்டபோதிலும், முந்தைய அரசாங்கம், 30/1 தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவளிக்கும் அதன் இணை அனுசரணையைத் தொடர்ந்தது.
 
4. தீர்மானம் பற்றியதில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இலங்கை மக்கள் நாடு முன்னோக்கிச் செல்வதற்கான வேறு பாதை வேண்டும் என்ற விருப்பத்திற்கு தெளிவான சமிக்ஞையை வழங்கியுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி தனது உரையில் கூறியது போல், “ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளில் பங்கேற்கும் உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்”. இலங்கை மக்களின் விருப்பத்திற்கேற்ப எமது அரசாங்கமானது; அணிசேரா, நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் அதேநேரம், பிரச்சனைகளைப் புதிதாக ஆராய்வதற்கும், "பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டின் மூலம் செழிப்பு என்ற அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கையர்களின் நலனுக்காக சமகால சவால்களைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை உள்நாட்டிலேயே காண்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. இக்கருத்தின் அடிப்படையில்;"இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில், அக்டோபர் 2015/30/1 மற்றும் மார்ச் 2017 இன் 34/1 ஆகிய முந்தைய தீர்மானங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட 40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கையின் முடிவைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
 
5. முன்னோக்கிய பாதை
 
(முழுமையான அறிக்கை)
 
9
இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியபோதும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை மக்கள் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து நிர்ணயித்த இலக்குகளை அடைவதில் இலங்கை உறுதிகொண்டுள்ளது. இந்த முடிவுக்கு;
 
அ) அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பிற்கமைவாக, தற்போதுள்ள பொறிமுறைகளை பொருத்தமான முறையில் பின்பற்றுதல் உட்பட, உள்ளடக்கப்பட்டதும், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டதுமான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறை மூலம் நிலையான அமைதியை அடைவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகிறது. இது; மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித நேயச் சட்ட மீறல்களைப் புலன் விசாரணை செய்த முந்தைய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்யவும் அவர்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நிலையை மதிப்பிடுவதற்கும், புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியவும் உச்சநீதிமன்ற நீதிபதி
தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதை உள்ளடக்கியது.
 
ஆ) 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் உட்பட்ட இலங்கையின் கடமைகளுக்கு இணங்க, நிலுவையில் உள்ள பிற அக்கறைகளையும் தேவையான இடங்களில் நிறுவன சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தும். சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகள்
மற்றும் பாதுகாப்புகளை முன்னெடுப்பதன் மூலமும், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் மூலமும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்தோரின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் வேரூன்றிய கொள்கைகளை நாங்கள் செயற்படுத்துவோம். அரசாங்கத்தின் கொள்கைகளை வகுத்தல் மற்றும் செயன்முறைப்படுத்துவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் 8 வது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் தொடக்க விழாவில் தனது கொள்கை அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கையை உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான தனது பார்வையை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றபோது, அங்கு நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களைச் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்கு உதவ தொடர்புடைய ஐ.நா. முகவராண்மைகளை இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
 
இ) வழக்கமான மனித உரிமை ஆணைகள் / அமைப்புக்கள் மற்றும் பொறிமுறைகள் உட்பட ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களுடன் இலங்கை தொடர்ந்தும் பணியாற்றி, உள்நாட்டு முக்கியத்துவமிக்க விடயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு அமைய திறன் அபிவிருத்தி மற்றும் தொழினுட்ப உதவியை தேவைக்கேற்ப எதிர்பார்க்கும்.
 
ஈ) ஐ.நா. வின் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து, தீர்மானத்தை முடிவுறுத்துவதற்காக பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்க்கும்.
 
முடிவுரை
 
(முழுமையான அறிக்கை)
 
10
இலங்கையின் பல இன, பல மொழி, பல மத மற்றும் பல கலாச்சார மக்களின் நல்வாழ்வானது, இலங்கை அரசாங்கத்தை விட வேறு யாருக்கும் இல்லை. இந்த உந்துதல்களே எமது உறுதிப்பாட்டை வழிநடத்துவதுடன், விரிவான நல்லிணக்கம் மற்றும் எமது மக்களுக்கான நிலையான அமைதி மற்றும் செழிப்பு மிகுந்த சகாப்தத்தை நோக்க செல்வதற்கு தீர்மானிக்கின்றது. ஆகவே, இலங்கையின் உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் மேற்கூறிய நடவடிக்கைகள் யதார்த்தமானவையாக மட்டுமன்றி, வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன என்பது எமது வலுவான நம்பிக்கையாகும்.
 
இந்த முயற்சியில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்காக இந்த அமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
 
புத்த பகவானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்த உரையை நிறைவு செய்கின்றேன்,
"சியலு சத்வயோ நிதுக் வெத்வா, நிரோகீ வெத்வா, சுவபத் வெத்வா"
எல்லா உயிர்களும் பாதுகாப்பாக இருக்கட்டும்,
எல்லா உயிர்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்,
எல்லா உயிர்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
நன்றி.