சஜித் இன்று யாழ்ப்பாணத்தில் - யாழ் ஊடக சங்கத்தினருடன் விசேட கலந்துரையாடல்
Monday, 10 Aug 2020

சஜித் இன்று யாழ்ப்பாணத்தில் - யாழ் ஊடக சங்கத்தினருடன் விசேட கலந்துரையாடல்

2 July 2020 06:05 pm

தற்போது வடக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமகி ஜன பலவேகய  தலைவர் சஜித் பிரேமதாச இன்று யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்தில் நாக விகாரை மற்றும் நல்லூர் கோவில் ஆகிய வழிப்பாட்டு தளங்களில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் மத தலைவர்களை சந்தித்தார்.

அதன் பின் யாழ் ஊடக சங்கத்தின் (யாழ்ப்பாணம் பிரஸ் கிளப்) உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் வடக்கு கிழக்கில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து பிரேமதாச இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பல கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.

புகைப்படங்கள் - அஜித் செனவிரத்ன