கடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி
Monday, 01 Jun 2020

கடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி

21 August 2019 03:23 pm

புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த 18ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.