பாலைதீவுப்  பகுதியில் இருந்து படகு வழியாக மணல் திருட்டில் ஈடுபட்ட எட்டுப் பேர் கைது
Saturday, 27 Nov 2021

பாலைதீவுப்  பகுதியில் இருந்து படகு வழியாக மணல் திருட்டில் ஈடுபட்ட எட்டுப் பேர் கைது

24 October 2021 06:28 pm

கிளிநொச்சி மாவட்டம் பாலைதீவுப்  பகுதியில் இருந்து படகு வழியாக மணல் திருட்டில் ஈடுபட்ட எட்டுப் பேர்  நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பாலைதீவில் இருந்து மணல் அகழப்பட்டு மூடைகளாக பொதி செய்யப்பட்டு மணல்  களவாடப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பெயரில் இன்று காலை கடற்படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டனர். 

 

 இதன்போது 3 படகுகளில் மண் பொதி செய்யப்பட்ட நிலையில் படகில் ஏற்றிய நிலையில் படகுகளை கைப்பற்றிய கடற்படையினர் அந்த மணலை ஏற்றிய எண்மரையும் கைது செய்து ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேநேரம் இவ்வாறு தீவில் களவாக ஏற்றப்பட்ட மணல் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்பது தொடர்பில் விபரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.