இலங்கைக்கு மேலும் 2.5 மில்லியன் டொலர் அவசர COVID-19 உதவி வழக்கும் அமெரிக்கா
Saturday, 27 Nov 2021

இலங்கைக்கு மேலும் 2.5 மில்லியன் டொலர் அவசர COVID-19 உதவி வழக்கும் அமெரிக்கா

23 October 2021 10:37 am

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) இலங்கைக்கு "அவசர COVID-19 உதவி" என்ற அடிப்படையில் மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க மீட்பு திட்ட நிதியில் 2.5 மில்லியன் இலங்கையின் "பாதுகாப்பான மற்றும் பயனுள்ள  கொவிட் -19 தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை துரிதப்படுத்தும் மற்றும் கொவிட் -19 ஐ எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் திறனை வலுப்படுத்தும்" என்று USAID விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இலங்கை சுகாதார அமைச்சின் தடுப்பூசி விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஃபைசர் தடுப்பூசிக்கு பூஸ்டர் வழங்குவதற்கும், தடுப்பூசி திட்டங்களை நிர்வகிக்கும் ஊழியர்களின் திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த உதவியைப் பயன்படுத்த முடியும்" என்று USAID குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு மேலும் 500 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை நன்கொடை அளிக்க உறுதியளித்துள்ளது.

மார்ச் 2020 இல் கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, USAID இலங்கையில் COVID-19 நிவாரணத்திற்காக மொத்தம் 17.9 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.