ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி வழி, தயாசிறி, துமிந்த முதலமைச்சர் வேட்பாளர்கள்!
Saturday, 27 Nov 2021

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி வழி, தயாசிறி, துமிந்த முதலமைச்சர் வேட்பாளர்கள்!

23 October 2021 09:32 am

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி தனியாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாகத் தீர்மானித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களின் கோரிக்கைபடி தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிய கட்சிகள் சிலவற்றை இணைத்துக் கொண்டு வெற்றிலை  சின்னத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது.

மொட்டு கட்சி மக்கள் மத்தியில் பெற்றுள்ள அவப்பெயருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலையீடு செய்யத் தேவையில்லை என்ற  நிலைப்பாட்டில்  மைத்திரிபால சிறிசேனவும் உள்ளார்.

அதன்படி முன்னர் கூறியது போல தயாசிறி ஜயசேகர  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து வடமேல் மாகாண முதலமைச்சராக போட்டியிட உள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க வட மத்திய மாகாண  முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.