கடனட்டை இயந்திரம் செயல் இழந்ததால் அலைக்கழிக்கப்பட்ட ஜெர்மன் விமானம்!
Saturday, 27 Nov 2021

கடனட்டை இயந்திரம் செயல் இழந்ததால் அலைக்கழிக்கப்பட்ட ஜெர்மன் விமானம்!

17 October 2021 12:36 pm

கொழும்பு விமானநிலைய அதிகாரிகளின் அக்கறையின்மை காரணமாக ஜேர்மன் விமானமொன்று நெருக்கடிகளை எதிர்கொண்டமை குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

226 பயணிகளுடன் ஜேர்மனியிலிருந்து மாலைதீவிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று மாலைதீவில் மோசமான காலநிலை காணப்பட்டதால் அவசரமாக கொழும்பு விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எனினும் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க முயன்றவேளை விமானநிலையத்தில் கிரெடிட் கார்ட் இயந்திரங்கள் செயல் இழந்ததால் அதுதாமதமாகியுள்ளது, இதன் காரணமாக விமானத்தை தரையிறக்கியமைக்கான கட்டணத்தை செலுத்தமுடியாமல் ஜேர்மனி விமானத்தின் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் அதிகாரிகளின் தாமதங்கள் காரணமாக விமானம் தரித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டபோதிலும் – கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்கான அபராதம் என தெரிவித்து 48 டொலர்களை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.