யூனிலீவர் இலங்கை நிறுவனத்தை வரி மோசடியில் இருந்து பாதுகாக்க பல தரப்பினரும் முயற்சி
Saturday, 27 Nov 2021

யூனிலீவர் இலங்கை நிறுவனத்தை வரி மோசடியில் இருந்து பாதுகாக்க பல தரப்பினரும் முயற்சி

13 October 2021 01:41 pm

யூனிலீவர் இலங்கை தனது தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு ரூ .570 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலுத்தாது வரி மோசடி செய்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த மோசடி நடந்துள்ளது. நல்லாட்சி காலத்தில் நடந்த மோசடிகள் மற்றும் ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மோசடி செய்பவர்களை பாதுகாக்க வாதிடுகின்றனர்.

அக்டோபர் - ஏப்ரல் 2018 காலகட்டத்தில், யூனிலீவர் சவர்க்கார உற்பத்திக்காக பாம் ஒயில் கொழுப்பு அமிலத்தை இறக்குமதி செய்வதில் சுங்கத் துறைக்கு செலுத்த வேண்டிய 25% வரியை மோசடி செய்துள்ளது.

HS எண் 3823.19.20 இன் கீழ் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றாலும், அவை HS எண் 3823.19.90 இன் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நிறுவனம் உரிய வரிகளை செலுத்தாமல் தப்பியுள்ளது.

எனினும் சுங்கத் திணைக்களம் இதுகுறித்து விசாரணையை நடத்தியுள்ளதுடன், யூனிலீவர் ஸ்ரீலங்கா மோசடி மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு 570 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதற்காக ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேல் அபராதம் செலுத்த தவறியதால் சுங்க அதிகாரிகள் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய போதும் பதில் அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் யூனிலீவர் மீது 19/2021 எண் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனவரி 21, 2021 அன்று வழக்குத் தாக்கல் செய்தனர்.

நிறுவனத்திற்கு சாதகமாக வழக்கைத் தீர்க்க தற்போதைய அரசாங்கத்திலும் முந்தைய அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்த பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக உயர் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யூனிலீவர் நிறுவனத்தின் சட்டத் தலைவர் லக்சரா மரப்பன ஆவார். அவர் ஜனாதிபதியின் வழக்கறிஞர் நவீன் மாரப்பனவின் மனைவி ஆவார். நவீன் மாரப்பனவின் தந்தை கொழும்பு போர்ட் சிட்டி நரக ஆணைக்குழுவின் தலைவர் ஆவார்.  

காமினி மாரபனவின் சகோதரர் திலக் மாரப்பனா ஆவார். அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்தார்.

திலக் மாரப்பன நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அப்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியதால் தற்போதைய ஆட்சியில் மாரப்பன குடும்பத்திற்கு அதிக சலுகை கிடைக்கிறது.

யுனிலீவர் இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி வழக்கில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. சுங்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுங்கத் துறையை அரசு பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்றாலும், யூனிலீவரை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டவர்கள் அந்த நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்று சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.