டொலர் இன்றி 1300 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தகவல்
Monday, 25 Oct 2021

டொலர் இன்றி 1300 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தகவல்

24 September 2021 01:35 pm

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இந்த நாட்டிற்கு ஏனைய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளவும் டொலர்   இன்மை மற்றும் கடன் பத்திரம் வழங்காமை இந்த பிரச்சனைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேரடியாக பணம் செலுத்தி பொருட்களை விடுவித்து கொள்ள வேண்டிய நிலையில் டொலர் பெறுமதியும் அதிகரித்துள்ளதால் இறக்குமதியாளர்கள் பெரிதும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

 இந்த பிரச்சினையால் கடந்த மூன்று மாதங்களுக்குள் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 1300 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

தாமத கட்டணங்கள் செலுத்த வேண்டிய நிலையிலும் இந்தப் பொருட்களை விடுவித்துக் கொண்டால் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.