நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை கைது செய்தமையை கண்டிப்பதாக சுமந்திரன் தெரிவிப்பு
Tuesday, 26 Oct 2021

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை கைது செய்தமையை கண்டிப்பதாக சுமந்திரன் தெரிவிப்பு

23 September 2021 05:06 pm

 

நினைவுகூறலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பொலிசார்  கைது செய்தமையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நினைவேந்தலை தடை செய்ய முடியாது.

அதேபோன்று நீதிமன்ற தடைகள் ஏதும் கிடையாது. எந்தவொரு அத்துமீறலோ அல்லது அதுக கூட்டம் கூட்டப்பட்டு கொரோனா பாதுகாப்பு மீறலோ இன்றி ஓர் மக்கள் பிரதிநிதி மேற்கொண்ட நினைவேந்தலை பொலிசார் கையாண்ட விதம் மிகவும் பாரதூரமானது.

இவ்வாறு பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும் ஒரு சாதாரண மனிதனிற்கு வழங்க வேண்டிய கௌரவத்தையேனும் வழங்காது இழுத்துச் சென்று குற்றவாளியை கொண்டு செல்வது போன்று கொண்டு இதுவரை உறவுகளுடனேனும் தொலைபேசி அழைப்பிற்குகூட சந்தர்ப்பம் வழங்காதமையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எமது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கின்றேன் என்றார்.