DP Education இலங்கையில் உள்ள 4.2 மில்லியன் மாணவர்களில் 650,000 மாணவர்களை சென்றடைந்துள்ளது
Saturday, 27 Nov 2021

DP Education இலங்கையில் உள்ள 4.2 மில்லியன் மாணவர்களில் 650,000 மாணவர்களை சென்றடைந்துள்ளது

12 September 2021 03:03 pm

கொவிட் தொற்று நோயானது முழு உலகத்தின் கல்வி செயன்முறைகளை மாற்றிமைத்துள்ளது. இதன் விளைவாக  பாடசாலைக்கல்வி முறையானது வியத்தகு முறையில் மாற்றமடைந்துள்ளது. ஓர் தனித்துவமான இலத்திரனியல் எனும்   டிஜிட்டல்  தளத்தில் கற்பித்தலை தொலை இயக்கியாக கொண்டு (remote)  இது கால் பதித்துள்ளது. 

 இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் முன்னணி வர்த்தகர், தொழிலதிபர் திரு தம்மிக்க பெரேரா என்று அழைக்கப்படும் திரு குலப்பு ஆராச்சிகே டொன் தம்மிக்க பெரேரா அவர்கள் ஓர் நவீன யுகத்திற்குள் கால் பதித்துள்ளார். DP எடியுகேஷன் எனும் புதிய கல்விசார் நடைமேடை ஒன்றை இவர் அறிமுகம் செய்துள்ளார். இதுவே இலங்கையில் உள்ள மிகப்பெரிய நிகழ்நிலை  (online)   கற்றல் கூடமாகும். பாடசாலை பாடத்திட்டங்களுடன் கூடிய  கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களை  உள்ளடக்கிய கற்பித்தல் காணொலிகள் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவரின் அறிவை மேம்படுத்துமுகமாக கற்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த டிஜிட்டல் நடைமேடையானது (platform) மும்மொழிகளிலும் கிடைக்கின்றது. இலங்கையில் உள்ள 4.2 மில்லியன் மாணவர்களில் 6,50 000 பேரை அதாவது பாடசாலை செல்லும்  மாணவர்களில் 15% வீதமானோரை  கடந்த இரண்டுவருடத்திற்குள் குறிப்பாக நாடு முமுவதுமாக முடக்கப்பட்டிருந்த சூழலில் இது சென்றடைந்துள்ளது. 500,000 பாடம் சம்பந்தப்பட்ட பதிவேற்றங்களும் 1,50 000 வலை தளங்களும், வலையொளிகளும் கிடைக்கப் பெறுகின்றன.  முன்பள்ளி தொடக்கம் ஆண்டு 13வரையான மாணவர்கள் இதனால் இலவசமாக பயனடைகின்றனர்.


 ஆகையினால் இதுபோன்ற பெருந்தன்மையான சேவையை வழங்கும் திரு டம்மிக்க பெரேராவுக்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் நாம் ஒன்றாக படைதிரண்டு வறுமை என்ற அரக்கனை கல்வி எனும் பட்டயத்தால் வென்று ஒழிப்போமாக.

ஆக்கம்
Angie Ragunathan
 (கல்வியாளர், மாணவ ஆலோசகர்)