இரத்தின கல்லும் சீனாவிற்கு!
Friday, 24 Sep 2021

இரத்தின கல்லும் சீனாவிற்கு!

29 July 2021 09:06 am

இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை சீனாவில் விற்பனை செய்யவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் உரிமையாளரின் விருப்பத்துடனேயே சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இரத்தினக்கல்லை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன்னர், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும் என அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.