இறுதி ஓவரில் இந்திய அணியை வென்ற இலங்கை அணி
Saturday, 25 Sep 2021

இறுதி ஓவரில் இந்திய அணியை வென்ற இலங்கை அணி

28 July 2021 11:43 pm

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டுவன்ரி20 போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி 4 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அணித் தலைவர் சிகர் தவான் 40 ஓட்டங்களையும், தெவதத் படிக்கல் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அகில தனஞ்சய 29 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டியது.

இதில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் மினோட் பானுக்க 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் குல்திப் யாதவ் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை இந்திய அணிகள் தலா ஓர் போட்டியில் வெற்றியீட்டி போட்டித் தொடரில் சமனிலை வகிக்கின்றன. நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றியீட்டும் அணி போட்டித் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.