சிறுமி மரண வழக்கில் ரிசாத் பதியூதின் விரைவில் கைது
Saturday, 25 Sep 2021

சிறுமி மரண வழக்கில் ரிசாத் பதியூதின் விரைவில் கைது

27 July 2021 09:33 pm

தனது வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ரிசாத் பதியூதினை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். 

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர் என்ற அடிப்படையில் ரிசாத் பதியூதின் பிரதான சந்தேகநபராக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் ரிசாத் பதியூதினின் மனைவி, மாமனார், மச்சான் மற்றும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ரிசாத் பதியூதின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.