கொரோனா குமாராக மாறும் சிம்பு
Saturday, 25 Sep 2021

கொரோனா குமாராக மாறும் சிம்பு

27 July 2021 04:00 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது. முதலில் இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.