ஹரின் பெனாண்டோ சிஐடி விசாரணைக்கு அழைப்பு, கைது செய்யப்படுவாரா?
Saturday, 25 Sep 2021

ஹரின் பெனாண்டோ சிஐடி விசாரணைக்கு அழைப்பு, கைது செய்யப்படுவாரா?

27 July 2021 12:47 pm

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இலக்கம் ஒன்று பிரிவிற்கு நாளை 28ஆம் திகதி காலை 10 மணிக்கு வருகை தருமாறு ஹரின் பெனாண்டோவின் சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஊடக சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹரீன் பெனாண்டோ கைது செய்யப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.