இலங்கை அணிக்கு மற்றுமொரு தோல்வி
Saturday, 25 Sep 2021

இலங்கை அணிக்கு மற்றுமொரு தோல்வி

26 July 2021 11:10 am

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் யாதவ் 50 ஓட்டங்களையும் தவான் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் சமீரா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் ஹசரங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் கல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் அடிப்படையில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றுள்ளது.