அமைச்சுப் பதவிக்கு ஆசைபட்டே 20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம் - பதியூதின் கட்சி எம்பி
Saturday, 25 Sep 2021

அமைச்சுப் பதவிக்கு ஆசைபட்டே 20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம் - பதியூதின் கட்சி எம்பி

19 July 2021 09:18 am

அமைச்சுப் பதவியும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியும் வழங்குவதாக அரசாங்கம் உறுதி அளித்ததை அடுத்தே 20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாக ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் தெரிவித்துள்ளார். 

தான் உள்ளிட்ட 7 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் ஆனால் ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்னெவென்று தெரியாதென அலி சப்ரி ரஹிம் கூறியுள்ளார். 

தனக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சு பதவி தருவதான வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் பசில் ராஜபக்ஷ அதனை நிறைவு செய்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.