ஜெர்மனியில் வெள்ள அனர்த்தம், இதுவரை 120 பேர் பலி
Saturday, 25 Sep 2021

ஜெர்மனியில் வெள்ள அனர்த்தம், இதுவரை 120 பேர் பலி

17 July 2021 12:30 pm

ஜெர்மனி மற்றும் அண்டை நாடுகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக, நலவாழ்வு மையத்தில் வசித்து வந்த 9 மாற்றுத் திறனாளிகள் உட்பட 50 பேர் பலியனதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை மாகாணமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன மழை காரணமாக ஜெர்மனியில் மட்டும் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். சாலைகள் சேதமடைந்து உள்ளதாலும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக 900 வீரர்களை ஜெர்மனி ராணுவம் அனுப்பியுள்ளது.

பெல்ஜியத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 5 பேரைக் காணவில்லை.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து பெய்த மழையால் பல ஆறுகள் மற்றும் ஏரிகளின் கரைகள் உடைந்தன. இதன் காரணமாக ஷ்லெதீம், பெக்கிங்கன் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.