புதிய கொழும்பு துறைமுக நகரச் சட்டம் குறித்து நீடித்துவரும் பாரதூரமான சிக்கல்கள்
Saturday, 25 Sep 2021

புதிய கொழும்பு துறைமுக நகரச் சட்டம் குறித்து நீடித்துவரும் பாரதூரமான சிக்கல்கள்

27 May 2021 09:51 am

பின்பற்றப்பட்ட அவசரமான செயல்முறை மக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநிறுத்தத் தவறிவிட்டது. 

மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பை மீளாய்வு செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை. 

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஸ்தாபித்தல் மற்றும் அவற்றினை முறையாக மேற்பார்வை செய்யாமை காரணமாக துறைமுக நகரம் பண தூய்தாக்கல் மற்றும் சட்டவிரோத நிதி பாய்ச்சல்களை ஈர்க்கும் வாய்ப்புக்கள் உண்டு. 

வர்த்தகம் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் அணுகுவதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் துறைமுக நகரம் ஒரு ரகசிய அதிகார வரம்பாக மாறி குற்றங்களினால் பெறப்படும் வருமானத்திற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க நேரிடலாம். 

துறைமுக நகரம் காரணமாக இலங்கை நிதி நடவடிக்கைகள் தொடர்பான பணிக்குழுவால் (FATF) தரமிறக்கப்படும் அபாயத்தையும் எதிர்கொள்கிறது. 

2021 மே மாதம் 20 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார மசோதாவை சட்டமாக நிறைவேற்றியது. மசோதா மீதான வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்> பாராளுமன்ற சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு இந்த மசோதாவின் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை தொடர்பாக நாட்டின் உயர் நீதிமன்றம் அளித்த தீர்மானத்தை வெளிப்படுத்தினார். துறைமுக நகர மசோதாவை சவாலிற்கு உட்படுத்திய மனுதாரர்களில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமும் (TISL) ஒன்றாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை வரவேற்கும் அதே வேளையில்> புதிய சட்டம் குறித்து TISL நிறுவனம் தொடர்ந்து தீவிர கரிசனை கொண்டுள்ளது. 

ஆரம்பத்தில்> அவசர அவசரமாக சட்டம் இயற்றப்பட்ட விதம் இலங்கை குடிமக்களின் தகவல் அறியும் உரிமைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்மொழியப்பட்ட மசோதா முன்கூட்டியே வர்த்தமானியில் சேர்க்கப்படவில்லை> உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகும்> பொது மக்களின் ஆலோசனை மற்றும் பொதுசன மீளாய்வுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை> ஏனெனில் இம்மசோதா நாட்டில் மூன்றாவது கோவிட் அலையின் தீவிர நிலையின் மத்தியிலும் கூட விரைவில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கியமான மசோதாவினை இத்தனை விரைவாக செயல்படுத்தியமை> அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட இலங்கை மக்களின் தகவல்களுக்கான அடிப்படை உரிமையானது> நாட்டில் இவ்வளவு பாரதுரமான தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்க்கமான ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சியின் போது மதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த செயல்முறை இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை முழுமையாக புரிந்துகொண்டு> மதிப்பாய்வு செய்து> தகவல்களை அறிந்து முடிவை எட்டவும் போதுமான கால அவகாசத்தை வழங்கவில்லை என்பதை TISL வலியுறுத்தி கூற விரும்புகின்றது.   

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுவது பணதூய்தாக்கல் மற்றும் சட்டவிரோத நிதி பாய்ச்சலுக்கான பாதைகளைத் திறந்துவிடக்கூடும் என்பதே குறித்த மசோதாவுக்கு எதிரான தனது மனு மூலம் TISL எழுப்பிய பிரதான விடயங்களில் ஒன்றாக உள்ளது. 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாத நிதியுதவியை ஒடுக்குவதற்கான சட்டம்> 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணதூய்தாக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகளை அறிக்கையிடல் சட்டம் ஆகியவை கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகார எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் வெளிப்படையான தீர்மானம் இவ்விடயங்கள் தொடர்பாக எழுந்துள்ள ஆபத்துக்கள் சிலவற்றைத் குறைத்துள்ளது. இருப்பினும்> நிறுவன பதிவாளர் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்> மேலும் இந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு வங்கிச் சட்டம் பொருந்துமா என்பதை பற்றி உயர் நீதிமன்றம் வெளிப்படையாகக் எதுவும் குறிப்பிடவில்லை. 

சமீபத்தில் இயற்றப்பட்ட துறைமுக நகர மசோதா> துறைமுக நகரில் செயல்படும் நிறுவனங்கள் அந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதை கட்டாயமாக்கவில்லை. பணதூய்தாக்கல் அல்லது பயங்கரவாத நிதியுதவிக்காக சட்டப்பூர்வ நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க> நிறுவனங்களை வைத்திருக்கும் இறுதி உரிமையாளர்களான தனிநபர்களின் தகவல்களை வெளியிடுவது மிக முக்கியமானது. சட்ட அமுலாக்கத்தால் அத்தகைய தகவல்களை அணுக முடியும் என்றாலும்> பொது அணுகல் இல்லாததால்> பொதுமக்கள் இத்தகைய நிறுவனங்கள் குறித்து குறைந்தளவு தகவல்களை பெறுவதால்> பல சட்டவிரோத கொடுக்கல்வாங்கல்கள் கவனிக்கப்படாமல் போவதற்கும் வழிவகுக்கும். பொதுவில் அணுகக்கூடிய நேரடி உரிமையாளர் தொடர்பான தகவல் ஒரு சிறந்த நடைமுறை மட்டுமல்ல> அது கொடுக்கல்வாங்கல்களின் போக்குகள் மற்றும் ஆபத்துக்களை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. 

கறுப்புப் பணத்தை ஈர்ப்பது மற்றும் எளிதாக்குவது தொடர்பான அபாயங்கள் அதிகரிப்பதானது> இலங்கை நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) தரவரிசைப்படுத்தலில் தரமிறக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்> இது வெளிநாட்டு உதவி> கடன்கள் மற்றும் சட்டபூர்வமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கைக்கு தடையாக அமையும். 

Tax Justice Network வலையமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் ரகசியமாக/வெளிநாட்டு அதிகார வரம்புகளில்> வரிச் செலுத்தப்படாத 21 முதல் 32 டிரில்லியன் டொலர் தனியார் நிதிச் செல்வம் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு அதிகார வரம்புகள் கார்ப்பரேட் வரி துஷ்பிரயோகம், தனியார் வரி ஏய்ப்பு, மூலதன வரி மற்றும் எல்லை தாண்டிய சட்டவிரோத நிதி பாய்ச்சல்களுக்கு காரணமாகின்றன. 2021 ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு மாநாட்டை (UNGASS) இலக்காகக் கொண்டு டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) UNGASS-க்கு பொது நல மனுவை சமர்ப்பித்துள்ளது. எல்லை தாண்டிய ஊழல் மற்றும் பிற குற்றங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் பிற சட்ட வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்”. நிறுவனங்களினால் நேரடி நன்மையைப் பெறும் உரிமையாளர்களின் நிகழ்நிலை பொது பதிவேடுகளை உருவாக்க உறுதியான கடமைகளை செய்ய ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளை அது கேட்டுக்கொள்கிறது. 2006 முதல் பனாமா ஆவணங்கள் மற்றும் பாரடைஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து> நன்மையடையும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதன் மூலம்> இரகசியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு குற்றங்களினால் பெறப்பட்ட செத்துக்களை மறைக்கவும் அத்துடன் பொது நிதிகளை மோசடி செய்யவும் மற்றும் வரிவிதிப்பைத் தவிர்க்கவும் நிறுவனமயப்பட்டு செயற்படும் ஊழல் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களை இனங்காணவும் உதவியாக அமையும் என TI எதிர்பார்க்கிறது.  

நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தகவல்களின் வெளிப்படைத்தன்மை மூலம் சட்டவிரோத நிதி பாய்ச்சல் பிரச்சினையை கையாள்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உலகம் ஒன்றிணைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்> இலங்கை துறைமுக நகர மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம்> சட்டவிரோத நிதி பாய்ச்சல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில் குறைபாடுள்ள ஒரு நிதி மையத்தை உருவாக்கியுள்ளது என்பதை TISL வருத்தத்துடன் குறிப்பிடுகிறது.