இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் - படங்கள்
Saturday, 25 Sep 2021

இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் - படங்கள்

18 May 2021 07:31 pm

 

முள்ளிவாய்கால் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில் கறுப்பு உடை அணிந்து மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், கலையரசன், சிறிதரன், சாணக்கியன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.