அதிகரிக்கிறது வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம்! விரைவில் அமைச்சரவை அனுமதி
Monday, 19 Apr 2021

அதிகரிக்கிறது வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம்! விரைவில் அமைச்சரவை அனுமதி

4 March 2021 09:38 pm

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தி உள்ளது. 

திருத்தம் அடங்கிய பத்திரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தற்போதும் கட்டுப்பணம் அறவிடப்படுவதாகவும் அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கட்டுப்பணம் குறைவு என்பதால் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து மக்கள் பணம் அதிகம் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மஹிந்த தேசப்பிரிய தலைவராக இருக்கும் காலத்தில் இந்த திருத்தம் தொடர்பிலான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

BR