சஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது
Wednesday, 26 Feb 2020

சஜித்தின் செயற்பாடுகள் தந்தைக்கு இழுக்காகேவே அமைந்துள்ளது

22 August 2019 09:36 am

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் தந்தை ரணசிங்க பிரேமதாசவின் செயற்பாடுகளுக்கு இழுக்காக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி நெருக்கடியான நிலைகளை எதிர்நோக்கிய போது கட்சியை கைவிட்டு விடாது கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்து மெய்யாகவே தலைமைத்துவம் தன்னை நோக்கி தேடி வரும் அளவிற்கு ரணசிங்க பிரேமதாச செயற்பட்டிருந்தார்.

1977ம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவின் வெற்றியில் ரணசிங்க பிரேமதாசவின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் மக்கள் செல்வாக்கையும் கட்சியில் தமக்கு இருக்கும் ஆதிக்கத்தையும் தெளிவாக புலப்படுத்தியே ரணசிங்க பிரதேசா கட்சியின் தலைமைப் பதவியை பெற்றுக்கொண்டார்.

எனினும், சஜித் பிரேமதாசவோ முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை கொண்டிருக்கின்றார்.

தந்தையின் பெயரைப் பயன்படுத்தி  அரசியல் நடாத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன், கட்சியின் வெற்றிக்காக அவர் பாடுபடத் தவறியுள்ளார்.

மஹாராஜ குழும நிறுவனத்தின் ஒத்துழைப்பினை மட்டுமே நம்பிக் கொண்டு சஜித் பிரேமதாச தனது பிம்பத்தை பெருப்பித்துக் காட்டவும், கட்சியை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளார்.