பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்
Monday, 16 Dec 2019

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்

22 July 2019 10:33 am

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியது போன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்நோக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்தினை இதற்கு உதாரணமாக கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மட்டும் இங்கிலாந்தில் 15 தடவைகள் பயங்கரவாத இல்லாதொழிப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் புதிய வழிமுறைகளுக்கு அமைய சட்டங்கள் திருத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.