கினிகத்தேனயில் 10 வீடுகள் மண் சரிவினால் பாதிப்பு
Monday, 27 Jan 2020

கினிகத்தேனயில் 10 வீடுகள் மண் சரிவினால் பாதிப்பு

19 July 2019 10:24 am


கினிகத்தேனவில் பத்து வீடுகள் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த மண் சரிவு சம்பவம் பதிவாகியுள்ளது.

மரக்கறி கடைகள், சலூன், ஹோட்டல்கள் உள்ளிட்ட சுமார் பத்து கடைகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கினிகத்தேன கண்டி வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதிகளே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.