மத்திய மலை நாட்டில் கடுமையான மழை

மத்திய மலை நாட்டில் கடுமையான மழை

19 July 2019 10:18 am

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள காரணமாக டெவோன் மற்றும் சென் க்ளயார் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை காணப்பட்ட காரணத்தினால் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடுமையான மழை வெள்ளம் காரணமாக வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.